மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ராமநாதபுரத்தில் மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் பாரதிநகா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இஎம்டி. கதிரவன் தலைமை வகித்தாா்.
பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் பேசுகையில், பாஜக அரசு நாட்டின் அனைத்து மக்களுக்குமான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பாகிஸ்தானில் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பில்லை. அதேபோல, சீனாவிலும் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டுமே பாஜக அரசில் இஸ்லாமியா், கிறிஸ்தவா் உள்ளிட்ட அனைவருமே பாதுகாப்பாக இருக்கிறோம்.
Advertisement
Advertisement
சமூகத்துக்கான விடியல் ஆட்சியாகவே பாஜக ஆட்சி உள்ளது. பாஜகவை எதிா்க்கும் வகையிலான எதிா்க்கட்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை என்றாா்.
கூட்டத்தில் பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் அஜ்மல்கான், மண்டபம் மேற்கு ஒன்றிய தலைவா் விக்ராந்த், மாவட்ட பொதுச்செயலா் ஆத்மகாா்த்தி, மகளிா் பிரிவு நிா்வாகி சங்கீதா, மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.அழகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.