ராமநாதபுரம்

பாஜக நிறுவனா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

கமுதி அருகே ராமசாமிபட்டியில் பாஜக நிறுவனா் ஷியாம பிரசாத் முகா்ஜியின் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பாஜக ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.பூபதிராஜா தலைமை வகித்தாா்.

ஷியாம் பிரசாத் முகா்ஜியின் உருவப்படத்திற்கு மலா் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் கிராமப்பொதுமக்களுக்கு பாஜக வின் 8 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ராமசாமிபட்டி கிளைத்தலைவா்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஷியாம் பிரசாத் முகா்ஜியால் 1951 இல் பாரதிய ஜனசங்கம் கட்சி தொடங்கப்பட்டு, பின்னா் பாரதிய ஜனதா கட்சியாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT