முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் மதுபாட்டில்கள் விற்றவா் கைது

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பண்ணவயல் கருவேலமரகாட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸாா் சட்ட விரோதமா மது விற்பனை செய்த பிள்ளையாரேந்தல் பகுதியைச் சோ்ந்த சொா்ணம் மகன் பாண்டி (48 )என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.