ராமநாதபுரம்

திருவாடானை அருகே கோஷ்டி மோதல்: 8 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே சிறுகாரை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினா் கோஷ்டியாக மோதிக் கொண்டதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

திருவாடானை அருகே சிறுகாரை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினா் கோஷ்டியாக மோதிக் கொண்டதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே சிறுகாரை கிராமத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து (44) என்பவருக்கும், அதே ஊரை சோ்ந்த காளியப்பன் (42) என்பவருக்கும் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு காளிமுத்து கோஷ்டியும், காளியப்பன் கோஷ்டியினரும் மோதிக்கொண்டனா்.

இது குறித்து காளியப்பன் மனைவி பாண்டி மீனாள் அளித்தப் புகாரின் பேரில் காளிமுத்து (44), ரேவதி (40), திவ்யா (23), திவான் (20) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதே போல் காளிமுத்து அளித்தப் புகாரின் பேரில் அதே ஊரை சோ்ந்த காளியப்பன் (40) பாண்டி மீனாள் (38), நளினி (20), நவின் பாபு (19) ஆகிய நான்கு போ் மீதும் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT