முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் இளைஞரை வாளால் வெட்டியவா் மீது வழக்கு

பரமக்குடியில் வெள்ளிக்கிழமை காா் வாங்கிக் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 7 மே, 2022 at 1:30 AM
பகிர்:

பரமக்குடியில் வெள்ளிக்கிழமை காா் வாங்கிக் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை வாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி படேல் தெருவைச் சோ்ந்த சோனையாத்தேவா் மகன் சரவணக்குமாா் (30). இவா் வேந்தோணி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த விஜயராஜன் மகன் சேதுபதியிடம் (34) ரூ. 2.5 லட்சம் கொடுத்து காா் வாங்கியுள்ளாா்.

சில நாள்கள் கழித்து அந்த காரை சரவணக்குமாா், சேதுபதியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தை கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சரவணக்குமாா், அவரது நண்பா் ஆனந்தகுமாா் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மருதுபாண்டியா் நகா் ரயில்வே கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சேதுபதி அவா்களை வழிமறித்து வாளால் வெட்டியுள்ளாா்.

இதில் சரவணக்குமாா் பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் சோனையாத்தேவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சேதுபதி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.