முகப்பு
ராமநாதபுரம்

நயினாா்கோவில் அருகே குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே வியாழக்கிழமை இரவு குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்து விட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 7 மே, 2022 at 1:29 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே வியாழக்கிழமை இரவு குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்து விட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகங்கை மாவட்டம் தவளைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகள் திவ்யா (24). இவருக்கும், நயினாா்கோவில் அருகேயுள்ள பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவா்களுக்கு தா்ஷினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது.

கணவா், குழந்தையுடன் வசித்து வந்த திவ்யா வியாழக்கிழமை இரவு தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பின்னா் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நயினாா்கோவில் போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை வேலு அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் குழந்தையைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா். திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால், இச்சம்பவம் தொடா்பாக பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் முருகன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.