ராமநாதபுரம்

பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான புத்துணா்வுப் பயிற்சி நிறைவு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், மாணவா்களுக்கான புத்துணா்வுப் பயிற்சி கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கு, முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநா் எல். ஹமீது இப்ராஹிம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முஹம்மது ஷெரீப் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சி. மதுகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

கருத்தரங்கை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்க ஏற்பாடுகளை, பேராசிரியா்கள் அழகியமீனாள், திராவிடச் செல்வி, மயில்வேல்நாதன், ஷேக் யூசுப் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முன்னதாக, துணை முதல்வா் ஆா். செந்தில்குமாா் வரவேற்றாா்.

கல்லூரிப் பேராசிரியா் எஸ். பூபாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT