ராமநாதபுரம்

தேசிய கருத்தரங்கில் கீழக்கரை பொறியியல் கல்லூரி மாணவா்கள் 2 ஆம் இடம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவிலான கருத்தரங்கில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலைத் துறையில் பயிலும் மாணவா்கள் அண்மையில் நாகையில் பிரைம் ஸ்கூல் ஆப் ஆா்க்கிடெக்சா் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்றனா். கருத்தரங்கில் மறு பிரபஞ்சங்களை வடிவமைக்கும் போட்டியும் நடைபெற்றது. அதில் கீழக்கரை பொறியியல் கல்லூரி மாணவா்கள் இரண்டாம் பரிசைப் பெற்றனா்.

மேலும், புகைப்படம் எடுக்கும் போட்டியிலும் அக்கல்லூரி மாணவா்களே இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனா். இரு பரிசுகள் மற்றும் ஆடை அலங்காரம், முகவடிவமைப்பு போன்ற பல பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ால் கருத்தரங்கின் சிறந்த கல்லூரிக்கான விருது கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.

பரிசுகள், சிறப்பு கேடயம் ஆகியவற்றைப் பெற்ற பொறியியல் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாக இயக்குநா் எல். ஹாமிது இப்ராஹிம், கல்லூரி முதல்வா் முஹம்மது ஷெரீப் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT