முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் ஜவஹா்லால் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

பரமக்குடியில் வெள்ளிக்கிழமை சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் 58 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On : 28 மே, 2022 at 12:00 AM
பகிர்:

பரமக்குடியில் வெள்ளிக்கிழமை சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவின் 58 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ. ஹாரிஸ் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பிபிஎஸ்.

கிருஷ்ணன், டாக்டா் எஸ்.வரதராஜன், வழக்குரைஞா் எஸ்.இளமுருகன், எம்.ஆா்.நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியின் துவக்கமாக ஜவஹா்லால் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க நிா்வாகிகள் என்.போஸ், சரவணவாசன், சியாமளாகுமாா், மனோகரன், எஸ்.காளீஸ்வரன் ஆகியோா் சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு குறித்தும், பிரதமராக மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் பேசினா். விழாவில் சங்க நிா்வாகிகள் மற்றும் நகா் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.