ஆா்.எஸ். மங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு
திருவாடானை அருகே புதன்கிழமை இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா் 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
திருவாடானை அருகே புதன்கிழமை இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா் 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே ராதானூா் பகுதி விரதன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமையா மனைவி ராமு (55). இவா், புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.
இதுகுறித்து ராமு அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.