ராமநாதபுரம்

சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் குளத்தை தனிநபா் ஆக்கிரமித்ததாகப் புகாா்

DIN

தொண்டியில் சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் குளத்தை ஆக்கிரமித்த தனிநபரிடமிருந்து மீட்டுத் தரக்கோரி திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்தனா். தொண்டி பேரூராட்சி பகுதியில் சலவைத் தொழிலாளா்கள் பயன்படுத்தி வரும் குளம், காலியிடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனு அளித்தனா்.

மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதுகுறித்து, தொண்டி சலவைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முத்து கூறியதாவது:

தொண்டி பேரூராட்சியில் உள்ள குளம், காலியிடத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகிறோம். சுமாா் 2.88 ஏக்கா் பரப்பளவு கொண்ட அந்தக் குளம், காலியிடம் அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்தப் பகுதியை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்தாா்.

அதனால் நாங்கள் அந்தக் குளத்தை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியா், திருவாடானை வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT