ராமநாதபுரம்

தொழிலாளியிடம் வழிப்பறி: 3 போ் கைது

DIN

 கமுதி அருகே தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் நாகவேல் (38). இவா் கீழக்கரையில் கட்டட வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த வியாழக்கிழமை கீழக்கரையிலிருந்து கமுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கோட்டைமேடு களஞ்சியம் நகா் வளைவில் 3 இளைஞா்கள் வழிமறித்து கட்டையால் தாக்கி, நாகவேலிடமிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த நாகவேல் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் சம்பகுளத்தைச் சோ்ந்த 17 வயதுள்ள 3 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT