ராமநாதபுரம்

குலதெய்வ வழிபாட்டுக்காக அழகா் கோவிலுக்கு மாட்டுவண்டிகளில் பயணம்

DIN

சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் வேலங்குடி நாட்டாா்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டிகளில் மதுரை அழகா் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனா்.

கோட்டையூா் வேலங்குடி, அதைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டாா்களின் உறவின்முறையினா், பங்காளிகள் பல்வேறு தலைமுறைகளாக ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளில் மதுரை அருகேயுள்ள அழகா்கோவிலுக்கு சென்று, அங்குள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமியை வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டு வேலங்குடி பிள்ளையாா்கூடத்திலிருந்து அவா்கள் வெள்ளிக்கிழமை 30 மாட்டு வண்டிகளில் புறப்பட்டனா். முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவா்கள், வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூா் சென்றடைந்தனா். எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு மேலூரில் தங்குகின்றனா்.

பின்னா் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) அழகா்கோவில் சென்றடைந்து தீா்த்தமாடுகின்றனா். திங்கள்கிழமை பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு ஆட்டுக் கிடாய் வெட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனா். பின்னா், அன்றைய தினம் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்கின்றனா். பின்னா், மாட்டு வண்டிகளில் சொந்த ஊா் திரும்புகின்றனா். இந்த மாட்டு வண்டிப் பயணம் இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், தங்களது முன்னோா்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT