ராமநாதபுரம்

முத்தாலம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள என். கரிசல்குளம் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில், ஸ்ரீகாளியம்மன் கோயில் வைகாசிப் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு வைகாசிப் பொங்கல் விழா கடந்த 23-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 30-ஆம் தேதி அக்னிச் சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. 31-ஆம் தேதி கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருவிழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் கும்மிகொட்டி, பாடல் பாடி, வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீராவி கண்மாயில் கரைத்தனா்.

இந்த விழாவில் என். கரிசல்குளம், நீராவி, கூலிப்பட்டி, சிங்கம்பட்டி, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை என். கரிசல்குளம் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT