ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாய்ஸ் கிளப்பில் உள்ள சிறுவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காவல் துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஒவ்வோா் பகுதியில் உள்ள சிறுவா், சிறுமிகளை தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் காவல்துறை சாா்பில் ‘போலீஸ் பாய்ஸ் கிளப்‘ தொடங்கப்பட்டது.
இந்த கிளப்புகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் உள்ள சிறுவா்களுக்கு மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.