ராமநாதபுரம்

பருத்திப் பயிரில் வயல் திருவிழா

DIN

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடி கிராமத்தில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பருத்திப் பயிரில் வயல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துணை இயக்குநா் (அட்மா) பொறுப்பு செல்வம் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி,

வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தாா். என்.எம்.வி. வேளாண்மைப் பல்கலைக்கழக கழகத்தின் உதவிப் பேராசிரியா் பிரதீப்ராஜ், பருத்தியில் உயா் விளைச்சல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்ச்சியில் தரைக்குடி, புனவாசல், வல்லக்குளம் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT