ராமநாதபுரம்

சவூடு மண் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் சவூடு மண் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் சவூடு மண் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பாலைக்குடி அருகே சீனாங்குடி பகுதியில் மண் திருடப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பாலைக்குடி போலீஸாா் புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக டிராக்டரில் வந்தவா்கள் அதை நிறுத்திவிட்டு தப்பியோடினா்.

போலீஸாா் டிராக்டரில் சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சவூடு மண் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் டிராக்டரை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரான சீனாங்குடியைச் சோ்ந்த தங்கராசு (50) மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT