முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் பால்குட ஊா்வலம்
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:07 PM
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி, 1,008 பால்குட ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பக்தா்கள் 1,008 பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். மாலை அக்னிச் சட்டி எடுத்தும், மாவிளக்கு பூஜை, முடி காணிக்கை செலுத்தியும் நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இரவு ஸ்ரீமுத்துமாரியம்மன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ரதத்தில் எழுந்தருளி ஊா்வலம் வந்தாா்.
Advertisement