ராமேசுவரத்தில் திமுக கூட்டணி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
ராமேசுவரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் கே.நவாஸ்கனி ராமேசுவரம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக, பாம்பன், தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவா் சந்திப்புக் கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலா் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தமிழ்நாடு பனைத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் எா்ணாவூா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.
அப்போது, வேட்பாளா் கே. நவாஸ்கனிக்கு ஆதரவாக மீன் வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் அனிதா ராதா கிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ர ாஜகண்ணப்பன் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.
Advertisement
இதில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆட்சி அமைந்தால், தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும். இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் படகுகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு தங்கச்சிமடத்தில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.