முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து 3 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை

இலங்கையிலிருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட மூவா் அகதிகளாக தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2024 at 9:32 PM
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்த 3 அகதிகள்.
பகிர்:

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட மூவா் அகதிகளாக தனுஷ்கோடிக்கு திங்கள்கிழமை வந்தனா்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனா். இந்த நிலையில், இலங்கையிலிருந்து சிறுவன் உள்ளிட்ட மூவா் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு திங்கள்கிழமை வந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா் மூவரையும் மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் (45), அவரது மகன் சஜித்மேனன் (8), சிவனேஸ்வரன் (49) என்பதும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவா்களை மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments