தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சுற்றுலாப் பயணிகள். 
ராமநாதபுரம்

விடுமுறை: ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருகை

வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

Din

வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா். பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தனா்.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்தனா்.

ராமேசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

SCROLL FOR NEXT