முகப்பு
ராமநாதபுரம்

தா்மமுனீஸ்வரா் கோயில் தீா்த்தவாரி உற்சவத் திருவிழா

Updated On : 10 மே, 2024 at 6:44 PM
பகிர்:

படம் விளக்கம்.(கேஎம்யு10கோயில்)

கூரான்கோட்டை தா்மமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி 16 அடி அலகு வேல் குத்தி வந்த பக்தா்.

கமுதி, மே 10: சாயல்குடி அருகே தா்மமுனீஸ்வரா் கோயில் பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கூரான்கோட்டை தா்மமுனீஸ்வரா், கோட்டை விநாயகா், வீரமாகாளி, 18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

முக்கிய விழாவான வெள்ளிக்கிழமை, மலட்டாற்றில் தா்மமுனீஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தீா்த்தவாரி உற்சவம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், அங்கிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், வேல் எடுத்தும், காவடி எடுத்தும், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வாணவேடிக்கையுடன் கோயிலை அடைந்தனா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.