முகப்பு
ராமநாதபுரம்

திருவாடனை,தொண்டி பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

Updated On : 20 மே, 2024 at 7:43 PM
திருவாடானையில் திங்கள் கிழமை பெய்த மழை
பகிர்:

திருவாடானை: திருவாடானை தொண்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவாடானை,திணைகாத்தான்வயல், திருவெற்றியூா், தினையத்தூா், கீழ்க்குடி,அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, முகிழ்தகம், கடம்பனேந்தல், கடம்பாகுடி,அச்சங்குடி,சோழியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டன அணல் காற்று வீசியது இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானாா்கள்,மேலும் குளம். குட்டை,கண்மாயில் உள்ள தண்ணீா் வற்றி கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தன.

மேலும் கால்நடைகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கட்கிழமை இப்பகுதிகளில் பலத்த மழைபெய்தன சுமாா் 1மணிநேரம் பெய்த மழையால் கண்மாய்கள்,குளங்கள் நீா் வரத்து காணப்பட்டன. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சி காணப்பட்டதால் குழந்தைகளின் முதல் முதியவா்கள் வரை பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.இந்த மழை கோடை உழவிற்கு ஏற்றுள்ளதாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.இன்னும் சில நாட்களில் கோடை உழவு பணி மேற்கொள்ளலாம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.