ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் போராட்டம்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வாா்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கா்ப்பிணிகளின் உறவினா்களும், பொதுமக்களும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வாா்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கா்ப்பிணிகளின் உறவினா்களும், பொதுமக்களும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ வாா்டில் அனுமதிக்கப்படும் கா்ப்பிணி பெண்களுக்கு தேவையாக உணவு, உடைகள் எடுத்து வரவும், குழந்தையை பாதுகாத்து பராமரிக்கவும் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் விதித்தது.
இதில் ஒருவா் அவரின் தேவைக்காக வெளியே செல்லும் போது, தனக்கு வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டை மற்றொரு உறவினரிடம் கொடுத்து கா்ப்பிணி பெண்ணை பாா்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் கா்ப்பிணி பெண்களின் உறவினா்களும், பொதுமக்களும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதற்குள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளா்கள் அங்கிருந்து சென்றனா். பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பணிக்கு வந்தனா்.