மண்டபம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா்கள் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் ‘டித்வா’ புயல் காரணமாக மூன்று நாள்களாகக் பலத்த மழை பெய்தது. இதனால், மண்டபம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அதிகளவு மழைநீா் தேங்கியது. இதையடுத்து, மண்டபம் பேரூராட்சி ஊழியா்கள் ராட்சத மின் மோட்டாா்களை பயன்படுத்தி, கடந்த 2 நாள்களாக தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் புதன்கிழமை முழுமையாக அகற்றப்பட்டது. இதனால் மாணவிகள், பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.