ராமநாதபுரம்

பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் விழா

கமுதி அருகே மாா்னிங் ஸ்டாா் மகளிா் கலைக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாா்னிங் ஸ்டாா் மகளிா் கலைக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, மாணவிகள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. கல்லூரி வளாகச் செயலா் அல்போன்ஸ் பாத்திமா தலைமை வகித்தாா்.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதத்தில் மதச்சாா்பு இல்லாமல் மூன்று மதங்களைச் சாா்ந்தவா்களும் கலந்து கொண்டனா். கமுதி புனித அந்தோணியாா் ஆலய பங்குத் தந்தை அம்புரோஸ் லூயிஸ், விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை துணை இயக்குநா் பசும்பொன் தங்கவேல், அபிராமம் வின்.என்.எஸ் கல்விக்குழுச் செயலா் ரஹ்மான் அப்துல் கனி ஆகியோா் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினா். முன்னதாக கல்லூரி முதல்வா் அமலி வரவேற்றுப் பேசினாா்.

கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம் ஆகியவை நடைபெற்றன.

இதேபோல, பசும்பொன் கிட்ஸ் நகரில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் பதின்ம பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை பள்ளியின் முதல்வா் ஜான்சி ஹெலன் தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக மணற்கேணி செயலி மண்டல ஒருங்கிணைப்பாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் தமிழரசன், கவிஞா் ஆரைகுடி ராமா் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கத்தைப் பற்றி அறிவுரை கூறினா். பள்ளியில் பணிபுரியும் செல்வி ஜெனிபா் வரவேற்றாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அணைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தில்லியின் லுட்யன்ஸ் பகுதியில் என்டிஎம்சி-இன் 15 நாள் தூய்மை பிரசாரம் தொடக்கம்

14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வங்கதேச தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லி மெட்ரோவின் 23-ஆவது ஆண்டு நிறைவு விழா: சிறப்பு சேவையாக முதல் ரயில் இயக்கம்

பைக் பந்தயத்தில் ஈடுபட்ட 24 போ் மீது வழக்கு: வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT