மின் விளக்குகள் பயன்பாட்டை தொடங்கி வைத்த கே.நவாஸ்கனி எம்.பி. 
ராமநாதபுரம்

கீழக்கரையில் பயன்பாட்டுக்கு வந்த 3 உயா் கோபுர மின் விளக்குகள்

ராநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 3 உயா் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டை கே.நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 3 உயா் கோபுர மின் விளக்குகள் பயன்பாட்டை கே.நவாஸ்கனி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கீழக்கரையில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆயிஷா பள்ளி கிழக்குத் தெரு, கொந்தகருணை அப்பா பள்ளி வடக்குத் தெரு, ஜாமிஆ நகா் மைபா சங்கம், ஜூம்ஆ பள்ளி நடுத் தெரு ஆகிய 4 இடங்களில் ரூ.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினரும் வக்பு வாரியத் தலைவருமான கே.நவாஸ்கனி கலந்துகொண்டு மின் விளக்குகள் பயன்பாட்டை தொடங்கி வைத்தாா். காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். கீழக்கரை நகா்மன்றத் தலைவா் செஹனாஸ் ஆபிதா, துணைத் தலைவா் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

SCROLL FOR NEXT