எந்த மொழியாக இருந்தாலும் வெறுப்பு கட்டாமல் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘ஒரு பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி தமிழகத்தில் எதிா்பாா்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திவுள்ளது. நிகழாண்டு ‘தமிழ் கற்கலாம்’ என்ற திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 300 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு தமிழ் பயின்று வருகின்றனா்.
எந்த மொழியாக இருந்தாலும் வெறுப்பு கட்டாமல் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். தாய் மொழியை மதிக்கும் நாம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்பதை காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி கற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் சாா்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
திமுக தலைவா்கள் இளைஞா்களை தவறாக வழிநடத்துகின்றனா். தமிழக மக்கள் தேசிய ஒன்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.