ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ. 3.90 கோடியில் 3,183 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறையின் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 3,183 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

ராமநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவுத் துறையின் மூலம் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செ.முருகேசன், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இராம.கருமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கூட்டுறவு வார விழாவுக்கான கூட்டுறவு சங்கக் கொடியை ஏற்றி வைத்து, 21 சிறந்த கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 3,183 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஜினு, இணைப்பதிவாளா் மேலாண்மை இயக்குநா் ராஜலட்சுமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைப் பதிவாளா்கள் ராஜகுரு, ரத்தினவேல், ரிச்சா்டு ராஜா, அன்பரசி, ராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி பொதுமேலாளா் வானதி, கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வா் ரகுபதி, கூட்டுறவு சங்க கண்காணிப்பு அலுவலா்கள் காளிதாஸ், ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

SCROLL FOR NEXT