திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் கோபுரத்தில் வளா்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரம் சுமாா் 130 அடி உயரம் கொண்டது. கோபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்தக் கோயில் கோபுரத்தில் சிலைகளுக்கிடையே அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகள் வளா்ந்துள்ளன. இதனால், கோபுரத்தில் உள்ள சிலைகள் சேதமடைந்துள்ளன. எனவே, இந்தச் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.