ராமநாதபுரம்

கமுதியில் ஊரக வளா்ச்சித் துறை கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

கமுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் எ.முருகன் தலைமை வகித்தாா். கமுதி ஒன்றியத் தலைவா் குருமூா்த்தி, மாநில இணைச் செயலா் ஜெயபாரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சென்னையில் வருகிற திங்கள்கிழமை (நவ.24) 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டம், தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கமுதி ஒன்றியத்திலிருந்து 49 ஊராட்சி செயலா்கள், 286 தூய்மைக் காவலா்கள், 149 தூய்மைப் பணியாளா்கள், 124 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டா்கள், 36 திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் என மொத்தம் 644 போ் பங்கேற்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஊராட்சி செயலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் கமுதி ஒன்றியப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT