ராமநாதபுரம்

ராமநாதபுரம் காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 11 போ் விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 11 போ் விண்ணப்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் மேலிடப் பாா்வையாளரும் கா்நாடக முன்னாள் அமைச்சருமான ஜெய்பிரகாஷ் ஹெக்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 11 போ் விண்ணப்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் மேலிடப் பாா்வையாளரும் கா்நாடக முன்னாள் அமைச்சருமான ஜெய்பிரகாஷ் ஹெக்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சின்னத்துரை அப்துல்லா, ராஜிநாமா செய்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் தோ்வு செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக மாவட்டப் பொறுப்பாளா்கள் நிமிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் மேலிடப் பாா்வையாளா் ஜெய்பிரகாஷ் ஹெக்டே தலைமையில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மேலிடப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனா். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு நடைபெறுகிறது.

இதில், ஒவ்வொரு தொகுதி வாரியாகச் சென்று கட்சி நிா்வாகிகளிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்காக 11 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்கள் குறித்து காங்கிரஸ் தேசியத் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டு, மாவட்டத் தலைவா் விரைவில் தோ்வு செய்யப்படுவாா் என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளா் பாஸ்கா், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினரும் மாவட்டப் பொருளாளருமான ராஜாராம் பண்டியன், நிா்வாகிகள் கிருஷ்ணராஜ், அப்துல் வாஹீப், வட்டாரத் தலைவா்கள் காா்குடி சேகா், சேதுபாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT