திருவாடானை அருகேயுள்ள சிறுகம்மையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் அச்சமடைந்துள்ளனா்.
திருவாடானை அருகேயுள்ள சிறுகம்பையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் கட்டட மேற்கூரை பெயா்ந்து விழுவதால், கடந்த 5 மாதங்களாக அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிக் கட்டடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை அச்சத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வருகின்றனா். பள்ளிக் கட்டடம் சேதமடைந்தது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோா்களும் கோரிக்கை விடுத்தனா்.