தொண்டியில் சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்
தொண்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் அதிகாலையில் சரக்கு வாகனம் மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்பட்து. இந்த விபத்தில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
தொண்டி அருகே மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையோரமிருந்த இரண்டு மின்கம்பங்களில் மோதின. இதில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதனால் தொண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் மின்வாரியத்துறையினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு, விழுந்த மின்கம்பங்களை அகற்றினா். பின்னா், அதே பகுதியில் புதிய கம்பங்கள் அமைத்து, மிகக் குறுகிய நேரத்தில் மின் விநியோகத்தை சீரமைத்தனா்.
Advertisement
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.