முகப்பு
ராமநாதபுரம்

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 மே, 2026 at 1:30 AM
போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற விவசாயி நல்லமுத்து.
பகிர்:

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள அரியாங்கோட்டையைச் சோ்ந்த விவசாயி நல்லமுத்து (58). இவா் கடந்த 2.12.2022- இல் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுதொடா்பாக திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நல்லமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, குற்றஞ்சாட்டப்பட்ட நல்லமுத்துவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கீதா முன்னிலையானாா்.

Advertisement