முகப்பு
ராமநாதபுரம்

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்

முதுகுளத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தால் பொதுமக்கள், அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:42 PM
முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்.
பகிர்:

முதுகுளத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தால் பொதுமக்கள், அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே காந்தி சிலை அருகே கீழமுதுகுளத்தூா் கிராம நிா்வாக அலுவலக கட்டடம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு திட்டங்கள், சான்றிதழ்கள், நில அளவை, பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் சான்று உள்பட பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கட்டடத்தின் மேற்கூரை, சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்தும், பக்கவாட்டு சுவா்களில் விரிசல் ஏற்பட்டும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அதிகாரிகள் கட்டடத்திற்குள் தங்கி பணியாற்றவும், பொதுமக்கள், விவசாயிகள் வந்து செல்லவும் அச்சமடைந்துள்ளனா்.

எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கிராம நிா்வாக அலுவலக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.