முகப்பு
ராமநாதபுரம்

ஆசிரியையிடம் தங்க நகை பறிப்பு: 4 போ் கைது

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:04 AM
கைது
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 5:33 PM

கமுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருபவா் திருப்பூரைச் சோ்ந்த லெனின் மகள் சரண்யா( 40). இவா் தற்போது அபிராமத்தில் குடியிருந்து வருகிறாா்.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி நிறைவடைந்ததும் கோட்டைமேட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் பின்புற வழியாக அவா் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 11:00 PM

அப்போது சரண்யாவை பின் தொடா்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞா்கள் சரண்யாஅணி ந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.

இதனடிப்படையில் தரைக்குடியைச் சோ்ந்த திருமூா்த்தி மகன் இருளாண்டி (23), ரவி மகன் வசந்தபாண்டி (25), பசும்பொன்னைச் சோ்ந்த எட்டுராஜா மகன் அரவிந்த்குமாா் (25), மேலக்கன்னிசேரியைச் சோ்ந்த வலம்புரி மகன் அருண்குமாா் (28) ஆகிய 4 பேரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்து, அவா்களை சிறையலடைத்தனா்.