முகப்பு
ராமநாதபுரம்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ராமேசுவரத்தில் மதுபோதையில் நண்பரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:39 PM
பகிர்:

ராமேசுவரத்தில் மதுபோதையில் நண்பரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ். இவரது நண்பா் மணிகண்டன் (19). இவா்கள் இருவரும் கடந்த 2021 ஜனவரி 24- ஆம் தேதி மது அருந்தினா். அப்போது மணிகண்டனிடமிருந்து ரூ. 3 ஆயிரத்தை பிரகாஷ் எடுத்துச் சென்ால் அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன் கத்தியால் குத்தி பிரகாஷை கொலை செய்தாராம்.

இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மனோகரன் ஆஜரானாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments