ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வரும் நிலையில், கடலோர மாவட்டத்தில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இதன் காரணமாக, கால் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் கரையோரம் உள்ள தென்னை உள்ளிட்ட பல மரங்கள் சேதமடைந்து வருகின்றன.