பரமக்குடியில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சித்த மருத்துவா் திருநாள், அகத்தியா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு சித்த மருத்துவா் துளசி தலைமை வகித்தாா். குழந்தைகள் பிரிவு மருத்துவா் ரமேஷ், மயக்கவியல் மருத்துவா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவமனை தலைமை மருத்துவா் முத்தரசன் சித்த மருத்துவத்தின் தந்தை மாமுனிவா் அகத்தியரின் உருவப் படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அகத்தியரின் உணவே மருந்து, பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம், சித்த மருத்துவக் கோட்பாடுகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு மருத்துவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.