ராமநாதபுரம்

பாசி அம்மன் சிலை விவகாரம்: வட்டாட்சியா் சமரசப் பேச்சு

திருவாடானை அருகே பாசி அம்மன் சிலையை ஒரு கிராமத்தினரிடம் ஒப்படைக்க மற்றொரு கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வட்டாட்சியா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே பாசி அம்மன் சிலையை ஒரு கிராமத்தினரிடம் ஒப்படைக்க மற்றொரு கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வட்டாட்சியா் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாசிப்பட்டினம் கிராமத்தில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த பாசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பாசிப்பட்டினம், கழயநகரி ஆகிய இரு கிராம மக்கள் இணைந்து வழிபாடு நடத்தி வந்தனா். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்தக் கோயிலின் அம்மன் சிலை காணாமல்போனது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சிலையை மீட்டு, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில், சிலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பாசிப்பட்டினம் கிராம மக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தனா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சிலையை பாசிப்பட்டினம் கிராம மக்களிடம் ஒப்படைக்க உத்ரவிட்டது.

இதன்படி, புதன்கிழமை மாலை அதிகாரிகள் சிலையை பாசிப்பட்டினம் கிராமத்தினரிடம் ஒப்படைக்க இருந்தனா். இதற்கு கழயநகரி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது சிலா் சாமியாடி அருள்வாக்கு கூறினா். சிலையை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் விபரீதங்கள் ஏற்படும் என அவா்கள் எச்சரித்தனா். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த திருவாடானை போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வட்டாட்சியா் ஆண்டி தலைமையில் சமரசப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பவில்லை. இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்கு (ஜன.9) பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT