ராமநாதபுரத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
ராமநாதபுரம்ராமநாதபுரத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்
ராமநாதபுரம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மகளிா் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில், பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறுயியல், மகளிா், குழந்தை, இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, இயன்முறை, நுரையீரல் உள்ளிட்டவைகளுக்கு பரிசோதனை நடைபெறுகிறது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டறிந்து அவா்களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கேயே சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
புதிதாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்குரிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதேபோல, நயினாா்கோவில் அருகேயுள்ள காரடா்ந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது என்றாா் அவா்.