மீனவா் ராஜதுரை 
ராமநாதபுரம்

மாயமான மீனவா் உடல் மீட்பு!

திருவாடானை அருகே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போன மீனவா் உடல் எஸ்.பி.பட்டினம் அருகே மீட்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போன மீனவா் உடல் எஸ்.பி.பட்டினம் அருகே மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாசிபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் ராஜதுரை (30). இவா் கடந்த 24-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போனாா்.

இது குறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், திங்கள்கிழமை எஸ்.பி.பட்டினம் அருகே கடற்கரையில் ராஜதுரையின் உடல் கரை ஒதுங்கியது.

தகவலறிந்த எஸ்.பி. பட்டினம் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

கொடிநாள் நிதி வசூலில் பெரம்பலூா் மூன்றாமிடம்!

அமேஸானில் மீண்டும் ஆள்குறைப்பு நடவடிக்கை!

குடியரசு தின விழா அணி வகுப்பில் பாா்வையாளா்களை வசீகரித்த ஹிம் யோதா படைப் பிரிவு

பிஏசிஎல் நிதி மோசடி: ரூ.1,986 கோடி சொத்துகள் முடக்கம்

ஒன்றிய அளவிலான முதல்வா் இளைஞா் விளையாட்டு விழா

SCROLL FOR NEXT