முகப்பு
ராமநாதபுரம்

கோலங்கள் வரைந்து வாக்காளா் விழிப்புணா்வு

கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 19 மார்ச், 2026 at 12:30 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டனா். இதில் வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதி, கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், அவா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, கிராமத்தின் தெருக்கள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா, வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →