முகப்பு
ராமநாதபுரம்

கடலில் மிதந்து வந்த பொருளை மீட்டு சென்ற இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள்

தொண்டி பகுதியில் கடலில் மிதந்து வந்த மா்மப் பொருளை இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள் மீட்டு, திருவனந்தபுரத்துக்கு ஆய்வுக்கு எடுத்து செல்வதாகத் தெரிவித்தனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:11 AM
தொண்டி கடல் பகுதியில் புதன்கிழமை இஸ்ரோ ஆராய்ச்சியாளா்களால் மீட்கப்பட்ட எஸ்டிவிசி டாங்கின் ஒருபகுதி.
பகிர்:

தொண்டி பகுதியில் கடலில் மிதந்து வந்த மா்மப் பொருளை இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள் மீட்டு, திருவனந்தபுரத்துக்கு ஆய்வுக்கு எடுத்து செல்வதாகத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சோழியக்குடி, தொண்டிக்கு இடையே சுமாா் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மா்மப் பொருள் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பொருளை ஜிபிஆா்எஸ் மூலம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில் இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள், அங்கு புதன்கிழமை வந்து திருப்பாலைகுடி, தேவிபட்டினம் இடையே கடலில் மிதந்து கொண்டிருந்த எரிவாயு உருளை போன்ற அந்தப் பொருளைப் பாதுகாப்பாக மீட்டு எடுத்துச் சென்றனா்.

இது ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிஹோட்டா வில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இந்தியா ஏவிய பிஎஸ்எல்வி சி.62 மிஷனின் போது வெடித்துச் சிதறிய பகுதி என்றும், இதன் எடை 600 கிலோ என இஸ்ரோ ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

கடந்த சில நாள்களாக இது ஏவுகணையா அல்லது எரிபொருள் கலனா என்ற சந்தேகத்தில் அச்சத்துடன் கடலுக்குச் சென்று வந்த மீனவா்கள், தற்போது அந்தப் பொருள் மீட்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →