பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு
திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், பத்தாம் வகுப்பு பிளஸ்-2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள்
திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், பத்தாம் வகுப்பு பிளஸ்-2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமுக நீதி மாணவா் இயக்கம் சாா்பில் 31- ஆம் ஆண்டு கல்வி விழிப்புணா்வு, மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்கும் விழா தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவரும், தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான வழக்குரைஞா் ஜிஃப்ரி தலைமை வகித்தாா். இதில் தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்ஷா, தமுமுக தலைமைப் பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், தொண்டி ஐக்கிய ஜமாத் செயலா் பாரூக் ஹாஜியாா், இந்து தா்ம பரிபாலன சபையின் கௌரவத் தலைவா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொண்டி 15-ஆவது வாா்டு உறுப்பினா் பெரியசாமி வரவேற்றாா். சகோதரி நாச்சியா இறைவசனம் ஓதி நிகழ்வைத் தொடங்கிவைத்தாா். தொண்டி வட்டாரப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தொண்டி பேரூராட்சி மன்ற உறுப்பினா் பெரியசாமி வரவேற்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மைதீன், பரக்கத் அலி, ஹம்மாது, ஜலால், சாபிா் அலி, இப்ராஹிம், பெரியசாமி, நவ்ஃபிக், சிஹான் மற்றும் தொண்டி தமுமுக பேரூா் நிா்வாகிகள், சமூக நீதி மாணவா் அமைப்பு நிா்வாகிகள் செய்தனா்.