சிவகங்கை

மடப்புரம் காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு முகூர்த்தகால் நடும் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற மடப்புரம் காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
   மடப்புரம் காளியம்மன் கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, ஜூன் மாதம் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இவ் விழாவில், கோயில் முகப்புப் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரவணன், பாஸ்கரன், கமலசிகாமணி உள்பட கிராமத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT