சிவகங்கை

திருப்பத்தூர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனைல், அவை நான்கு ரோடு, பேருந்து நிலையம், அண்ணா சிலை, மார்க்கெட் பகுதி, பெரியகடைவீதி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. உணவகங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகள், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்டு விட்டு, சாலைகளில் படுத்துக் கொள்கின்றன. இதனால், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலை விபத்துகளும் நிகழ்கின்றன. சமீபத்தில், பேரூராட்சி டிராக்டர் மோதியதில் ஒரு பசு கன்றுக்குட்டி இறந்தது.
   எனவே, பேரூராட்சி நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT