சிவகங்கை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சிவகங்கை மாவட்டத்துக்கு 9-ஆம் இடம்

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 9 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
   சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 269 பள்ளிகள் உள்ளன. இதில், மாணவர்கள் 9,954, மாணவிகள் 9,695 என மொத்தம் 19,649 பேர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வினை எழுதினர்.
  இதில், மாணவர்கள் 9,566, மாணவிகள் 9,497 என மொத்தம் 19,065 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம், சிவகங்கை மாவட்டம் 97.02 சதவீதம் பெற்று, மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
   கடந்த ஆண்டு 96.66 சதவீதம் பெற்று மாநில அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
   மேலும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள 269 பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 56, அரசு உதவிபெறும் பள்ளிகள் 18, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 51 என மொத்தம் 125 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
   இவை தவிர, தமிழில் 2 பேர், கணிதத்தில் 218 பேர், அறிவியலில் 334 பேர், சமூக அறிவியலில் 1,691 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT