சிவகங்கை

மதுபானக் கடைக்கு எதிர்ப்பு அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் மதுபானக் கடையை அகற்றக்கோரி அனைத்துக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
கண்டரமாணிக்கத்தில் மதுபானக் கடை உள்ள பகுதியில் மகளிர் உயர்நிலைப்பள்ளி, வங்கி, தபால் நிலையம், வாரச்சந்தை ஆகியன உள்ளன. இதன்அருகேமதுபானக்கடை இருப்பதால்குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்களால் அப்பகுதியில் பெண்கள், மாணவர்கள்நடமாட முடியாமல் அவதிப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த மதுபானக் கடையை அகற்றக்கோரிவெள்ளிக்கிழமையன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு திமுக கிளைச் செயலாளர் ராமன், மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மோகன்,ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்,காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஜவகர், முன்னாள் ஒன்றியத் தலைவர்பெருமாள்,மாதர்சங்க மாவட்டப் பொருளாளர் பாக்கியலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மதுபானக் கடையினை அகற்றக் கோரிகோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT